கொரோனா விதிகளை மீறும் சுற்றுலா பயணிகளுக்கு 8 நாட்கள் சிறை

மலைப் பிரதேச சுற்றுலா தலங்களில் ஒன்றான இமாச்சல பிரதேச மாநிலத்தில், ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஆனால், சுற்றுலா வருபவர்கள் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை. மணாலியில் விதிமுறைகளை மீறி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக செல்லும் புகைப்படங்கள் வெளியானதால் மத்திய அரசு எச்சரித்தது.

இதையடுத்து அங்கு விதிகளை மீறும் சுற்றுலா பயணிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 8 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என குலு மாவட்ட நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றத் தொடங்கி உள்ளனர். விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் காவல்துறை அபராதமாக 3 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது.