புதிய தனியுரிமை கொள்கைகளை அமல்படுத்த மாட்டோம்

-வாட்ஸ்அப்

இந்தியாவில் தனி நபர் தகவல் பாதுகாப்பு மசோதா சட்டமாகும் வரை புதிய தனியுரிமை கொள்கைகளை அமல்படுத்த மாட்டோம் என வாட்ஸ்அப் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் தனது புதிய தனியுரிமை கொள்கைகளை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில் வாட்ஸ்அப் செயல்பாடுகளை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் வாட்ஸ்அப் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, `வாட்ஸ்அப் தனது புதிய கொள்கைகளை தற்போதைக்கு அமல்படுத்தாது,’ என தெரிவித்து இருக்கிறார். இதுதவிர புது கொள்கைகளுக்கு அனுமதி வழங்காதவர்களும் செயலியின் அனைத்து அம்சங்களையும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து பயன்படுத்த முடியும்,’ என வாட்ஸ்அப் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் தெரிவித்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Sourced