தேசிய மாணவர் படை பயிற்சியில் ஸ்ரீ நேரு மஹாவித்யாலயா கல்லூரியின் என்.சி.சி ஒருங்கிணைப்பாளர் முதல் இடம்

ஸ்ரீ நேரு மஹாவித்யாலயா கல்லூரியின் உயிர்த்தொழில் நுட்பவியல் துறைத்தலைவருக்கு 2 TN Air Sqn சார்பாக முதல் இடம் பெற்று, தேசிய மாணவர் படை ANO & AMP தோள்பட்டை விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் பல்கலைக்கழக மானிய குழு என்.சி.சி.யை ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பாடமாக நிர்ணயித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டெல்லி தேசிய மாணவர் படை பொது இயக்குநர் அதிகாரிகள் டெல்லி தேசிய மாணவர் படை பொது இயக்குநர் அதிகாரிகள் பிரிவில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய பிரிவில் ஆண்களுக்கு காம்ப்டி மற்றும் பெண்களுக்கு குவாலியர் பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் நோக்கம் பள்ளி மற்றும் கல்லுரிகளில் சிறந்த என்.சி.சி அதிகாரிகளை நியமித்து ஊக்குவிப்பதே ஆகும்.

அந்த அடிப்படையில் ஸ்ரீ நேரு மஹாவித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உயிர்த்தொழில் நுட்பவியல் துறைத்தலைவர் புருஷோத்தமன், கல்லூரியின் தேசிய மாணவர் படை (NCC) ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

அவ்வகையில் நாக்பூர் அதிகாரிகள் பயிற்சி கழகம் நடத்திய பகுதி 1 பயிற்சியில் மற்றும் சென்னை தாம்பரம் விமானப்படை நிலையம் நடத்திய பகுதி 2 பயிற்சியில், பங்கேற்ற புருஷோத்தமன் 2 TN Air Sqn சார்பாக முதல் இடம் பெற்றார். 18 வாரப் பயிற்சியின் நிறைவாக அவருக்கு தேசிய மாணவர் படை ANO & AMP தோள்பட்டை விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இவரின் சாதனையை கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர் சுப்பிரமணி, போராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.