மருத்துவர் தினத்தை முன்னிட்டு முத்தூஸ் மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாராட்டு

சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனையில் மருத்துவர் தினம் கொண்டாட்டப்பட்டது. இதில்  கொரோனோ சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

மருத்துவர்கள் தினத்தையொட்டி கோவை சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள முத்துஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் முத்தூஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் முத்து சரவணகுமார் தலைமை தாங்கினார். விழாவில் அரிமா சங்கங்கள் மாவட்ட ஆளுநர் குப்புசாமி மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலையால் 798 டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர். அவரகளின் ஆன்மாக்கள் சாந்தியடைய கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து முத்தூஸ் மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து 500 -க்கும் மேற்பட்ட நோயாளிகளை 100 சதம் குணப்படுத்திய மருத்துவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

மருத்துவமனை தலைவர் டாக்டர் முத்து சரவணன் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 5 குடும்பங்களுக்கு கல்வி உதவித் தொகையாக ஒரு லட்சம் வழங்கப்பட்டது. சரவணம்பட்டி ஓசனம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மருத்துவமனை இயக்குனர் செல்வகுமார் அவர்களால் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு துறை டாக்டர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இரண்டாம் அலையில் குணம்பெற்ற குடும்பத்தினர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.