ரோந்து வாகன காவலர்களுக்கு ‘பாடி வோர்ன் கேமரா ‘

கோவை மாவட்டத்தில் ரோந்து வாகன காவலர்களுக்கு ‘பாடி வோர்ன் கேமராக்களை (body worn camera) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் வியாழக்கிழமை வழங்கினார்.

ரோந்து செல்லும் மற்றும் போக்குவரத்து காவலர்கள் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்படுவதை தடுக்கும் விதமாகவும், பணியில் உள்ள போலீசாரை கண்காணிக்கும் விதமாகவும் போலீசாருக்கு பாடி வோர்ன் கேமரா வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த கேமராவை போலீசார் தங்களது ஆடையின் மீது பொறுத்திக் கொண்டு பணிக்கு செல்லும் போது சம்பவ இடங்களில் நடைபெறும் அனைத்து விஷயங்களும் கேமராவில் பதிவாகும். இதனால் தேவையற்ற விவாதங்கள் தவிர்கப்படுவதுடன், போலீசார் எந்தெந்த பகுதிகளில் பணிகளை மேற்கொள்கின்றனர் என்பதும் துல்லியமாக கண்காணிக்க முடியும்.

மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி. செல்வநாகரத்தினம் இந்த கேமராக்களை போலீசாருக்கு வழங்கியதோடு விரைவில் கேமரா நேரலை செய்யப்படும் என்றும் அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.