மாநகராட்சி ஆணையாளர் கள ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில் தூய்மைப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள், களப்பணியாளர்கள் மேற்கொள்ளும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா (01.07.2021) ஆய்வு மேற்கொண்டார்.

வெள்ளக்கிணறு சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்திலும், துடியலூர் ஆர்.எஸ்.ரோடு மாநகராட்சி பிரிவு அலுவலக வளாகத்திலும் கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட சத்தி ரோட்டில் அமைந்துள்ள குப்பை மாற்று நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர், கிழக்கு மண்டலம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் 40 எம்எல்டி கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மாநகரப் பொறியாளர் லட்சுமணன், மண்டல உதவி ஆணையர்கள் (வடக்கு) மோகனசுந்தர், உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்பாஸ்கர், உமாதேவி, உதவிப்பொறியாளர் ஜீவராஜ், மண்டல சுகாதர அலுவலர்கள் ராமச்சந்திரன், ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.