45 லட்சம் செலவில் கேஜி மருத்துவமனையில் ஆக்சிஜன் பிளான்ட் துவக்கம்

கோவை கே.ஜி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருவதை கருத்தில் கொண்டு ட்ரின்ட் கம்பெனி மற்றும் எல்ஜி ஏர் கம்ப்ரசர் இயந்திரத்தின் மூலம் 45 லட்சம் மதிப்பிலான  ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் புதிய ஆக்சிஜன் பிளான்ட் மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் துவக்கி வைத்தார்.

சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்று அதிகம் இருந்ததால் நோயாளிக்கு வழங்கும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு நிலவியது. அந்த நிலையில் அவர்களுக்கு திரவ ஆக்சிஜன் வழங்கப்பட்டது.

இந்நிலையை மாற்ற, மருத்துவமனை வளாகத்தில் புதிய ஆக்சிஜன் பிளான்ட் நிறுவி, அதன் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு மற்றுமின்றி மாற்ற அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சைகள் ஆகியவைகளுக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.