பஞ்சதந்திரத்தின் 19 வது பிறந்தநாள்

உலக நாயகன் கமல் சினிமா துறையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை தனது திரைப்படங்கள் வாயிலாக எடுத்து கூறியிருப்பார். அனைத்து விதத்திலும் இவரது இவரது படங்கள் பல நூறு ஆண்டுகள் சினிமா மாணவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கிறது.

இவர் ஒரு ராகம் என்றால், கிரேசி மோகன் எதார்த்த கருத்துக்களை தனது குழந்தை தன வாசனங்கள் மூலம் வலிக்காமல் குத்தி கேட்டுவிடுவார். கமலும் அதற்கு சளைத்தவர் இல்லை. இவர்களது கூட்டணி எப்பொழுதும் தமிழ் சினிமாவை சிரஞ்சீவியாக வாழவைக்கும் மருந்தாக உள்ளது.

கமல் மற்றும் கிரேசி மோகன் கூட்டணியில் இன்றும் தொலைக்காட்சியில் எத்தனை முறை போட்டாலும், ஆர்மபத்தில் இருந்து முடிவு வரை சலிக்காமல் சிரித்து கொண்டே பார்த்து ரசிக்கலாம்.

பஞ்ச நண்பர்கள் சேர்ந்து செய்யும் பஞ்சாயத்தை பந்தாண்டுகள் மட்டுமல்லாமல், 19 ஆண்டுகள் கழித்தும், காட்சிகளும், அதில் வரும் வசனங்களும் அத்துப்படியாக பலர் கூறுவார்கள். இதன் தாக்கம் அனுபவசாலிகளின் குழந்தை தான நடிப்பால் தான் வந்தது என்றாலும் அதில் கதாசிரியராக கமலும், வசனகர்த்தாவாக கிரேசி மோகனும் திரையில் மறைமுகமாக பல சித்து விளையாட்டுக்களை செய்திருப்பார்கள். இந்த ஜாம்பவங்கள் மத்தியில் இயக்குனராக கே.எஸ்.ரவிக்குமார் தனக்குண்டான பாணியில் காட்சிகளில் கபடி ஆடியிருப்பார்.

கதைக்கு கமல், வசனத்திற்கு கிரேஸிமோகன், இயக்கத்திற்கு கே.எஸ்.ரவிக்குமார், இசைக்கு தேவா என நால்வருடன் நடிகர்கள் சேர தலைப்பிற்கு ஏற்ற கூட்டணி திரையிலும் மின்னியது. நண்பர்கள் பிரச்சனைகளில் இருந்து காப்பற்றுபவர்கள், ஆனால் அவர்களே பிரச்சனையை உருவாக்கி, அதில் தானாக சிக்கிக்கொண்டு, தட்டு தடுமாறி அதிலிருந்து வெளியே வரும் அந்த காமெடி கலந்த போராட்டம் தமிழ் சினிமாவால் தட்டி கழிக்கமுடியாத திரைப்படமாக உள்ளது. இது 100 நாட்கள் திரையரங்கில் வெற்றி ஓட்டம் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.