கொரோனா ஊரடங்கு: புதிய தளர்வுகள் அறிவிப்பு

கோவையில் கொரோனா நோய்த் தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில கடைகளின் செயல்பாடுகளுக்கு மாலை 7 மணி வரை நேரத் தளர்வுகள் அளிப்பதுடன், கூடுதலாக பின்வரும் செயல்பாடுகளும் அனுமதிக்கப்படுகிறது.

  • தேநீர் கடைகளில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.
  • மின் பொருள்கள், பல்புகள், கேபிள்கள், சுவிட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • ஹார்ட்வேர் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும்.
  • கல்வி புத்தகங்கள் மற்றும் எழுது பொருள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • வாகன விநியோகஸ்தர்களது விற்பனை மற்றும் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை அனுமதிக்கப்படும்.
  • செல்பேசி மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும்.
  • சாலையோர உணவு கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும்.
  • அரசின் அனைத்து அத்தியாவசிய துறைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.  இதர அரசு அலுவலர்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அனைத்து தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் தானியங்கி பணம் வழங்கும் (ATM) சேவைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அனைத்து வகையான கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும்.
  • அழகு நிலையங்கள், சலூன்கள், குளிர்சாதன வசதி இல்லாமலும் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • காலை 6 மணி முதல் மாலை 9 மணி வரை விளையாட்டு பயிற்சி குடும்பங்கள் இயங்கவும் பார்வையாளர்கள் இல்லாமல் திறந்த வெளியில் விளையாட போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும்.
  • பள்ளி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான பணிகள் அனுமதிக்கப்படும்.
  • அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் விளையாட்டு திடல் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடை பயிற்சிக்கு மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • இனிப்பு மற்றும் கார வகை விற்பனை செய்யும் கடைகளில் பார்சல் சேவைகள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்படும்.
  • திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளில்    பணியாளர்கள் உட்பட 100 நபர்கள் மட்டும் கொரோனா ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் பங்கேற்கலாம்.
  • திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதிபெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.