பிர்லா நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து ஓடும் நீர்

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஐந்து தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளிலும் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் சிற்றோடைகள் முதல் ஆறுகள் வரை மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வால்பாறை அருகே உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பிர்லா நீர்வீழ்ச்சியில் நீர் ஆர்பரித்து செல்லுகிறது இதனால் சோலையாறு அணையின் கொள்ளளவு 160 அடியாக உள்ள நிலையில் இன்று காலை நிலவரப்படி 62 அடியாக அதன் நீர்மட்டம் உயர்ந்துள்ளது மேலும் இந்த பருவமழை இதேபோன்று தொடர்ந்து செய்தால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து கிடுகிடுவென உயர வாய்ப்புள்ளது.