பில்லூர் அணை நிரம்பியது: வெள்ள அபாய எச்சரிக்கை

நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளா பகுதிகளில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழையால் காரமடை அருகே உள்ள பில்லூர் அணை நிரம்பியதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தற்போது கேரளாவிலும் நீலகிரி மாவட்டத்தில் அப்பர்பவானி போன்ற பகுதிகளில் கடந்த இரு தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிமாக பெய்து வரும் நிலையில் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக நேற்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரமாக இருந்தது பின்னர் நள்ளிரவில் படிப்படியாக அதிகரித்து தண்ணீர் வரத்து 15,000ஆயிரம் கன அடியாக உயர்ந்து.

பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவான 100அடியில் நேற்று காலை நிலவரப்படி 82 அடியாக இருந்தது ஆனால் நேற்று ஒரே நாளில் 15 அடி நிரம்பி நேற்று இரவு 97அடி வரை உயர்ந்தது. இன்னிலையில் பில்லூர் அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடியை எட்டியது அணையின் பாதுகாப்பு கருதி மின் மூலம் 6 ஆயிரம் கனஅடி நீரும் மேல் நான்கு மதகுகள் வழியாக 4 ஆயிரம் கனஅடி நீரும் பவானி ஆற்றில் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது

விநாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வருவாய்த்துறை மற்றும் காவல்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.