இல்லம் தேடி இலவச ஆக்சிஜன் சேவை

கோவையில் கொரோனா நோய் பாதித்தவர்களுக்கு, சென்னை மொபைல்ஸ் சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக உங்கள் இல்லம் தேடி இலவச ஆக்சிஜன் எனும் புதிய சேவை துவங்கப்பட்டுள்ளது.

கொரானா வைரஸ் இரண்டாவது அலை பரவலில் பாதிக்கபட்டு ஆக்சிஜன் கிடைக்காமல் பலர் உயிரிழந்த பரிதாபம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஏற்பட்டது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமானதால், மருத்துவமனைகளில் இடமில்லாமலும், ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டது.

இந்நிலையில் ஆக்சிஜன் கிடைக்காமல் ஒரு உயிரும் போக கூடாது எனும் நோக்கத்தில் கோவை சென்னை மொபைல்ஸ் சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக உங்கள் இல்லம் தேடி இலவச ஆக்சிஜன் எனும் சேவை துவங்கப்பட்டுள்ளது. அதன் படி இவர்களுடன் மனித நேயம் பவுண்டேஷன் மற்றும் பசியில்லா தமிழகம் அமைப்பினர் ஆகியோர் இணைந்து கொரோனா பாதித்து, ஐந்து லிட்டர் வரை ஆக்சிஜன் தேவைபடுபவர்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை அவர்களது இல்லத்திற்கே சென்று வழங்கி வருகின்றனர்.

இந்த சேவையை துவக்கி வைத்த சென்னை மொபைல்ஸ் சம்சு அலி மற்றும் ஸ்ரீதேவி சில்க்ஸ் சிவகணேஷ் ஆகியோர் பேசுகையில், தற்போது ஆக்சிஜன் தேவை அதிகமாக இருப்பதால் செறிவூட்டிகளை தேவைபடுபவர்களுக்கு அவர்களது இல்லத்திற்கே சென்று தேவைப்படும் நாட்கள் வரை வழங்குவதாகவும், கோவையை சுற்றி சுமார் முப்பது கிலோ மீட்டர் வரை இந்த சமூக பணிகளை செய்து வருவதாக தெரிவித்தனர்.