டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

டிவிஎஸ் மோட்டர் நிறுவனம்,கோவையில் தனது டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.  இவ்வாகனம், கனெக்டட் தொழில்நுட்பம் உடன் வடிவமைக்கப்பட்டு  இருப்பதோடு, மேம்பட்ட எலெக்ட்ரிக் டிரைவ்ட்ரெய்ன் மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்துடன் கூடிய டிவிஎஸ் ஸ்மார்ட் கனெக்ட் ப்ளாட்ஃபார்ம் என அபாரமான ஆற்றல்மிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகமாகி இருக்கிறது.

இது குறித்து டிவிஎஸ் மோட்டர் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.என். ராதாகிருஷ்ணன் கூறுகையில்: டி.வி.எஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் என்பது ஒரு மேம்பட்ட எலெக்ட்ரிக் டிரைவ் ட்ரெய்ன் மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பமான டிவிஎஸ் ஸ்மார்ட்கனெக்ட் ப்ளாட்ஃபார்மின் மிகச் சிறந்த கலவையாக உருவாக்கப்பட்டிருக்கிறது  என்றார்.

டி.வி.எஸ் ஐக்யூப் எலக்ட்ரிக்கில் ஆற்றல்மிக்க 4.4 கிலோவாட் மின்சார மோட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது, இது அதிக சக்தி மற்றும் அபாரமான செயல்திறன் இரண்டையும் எந்தவிதமான ட்ரான்ஸ்மிஷன் இழப்பும் இல்லாமல் வழங்குகிறது. டி.வி.எஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 78 கி.மீ ஆகும்.

டி.வி.எஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் தனியுரிம அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்திலான டிவிஎஸ் ஸ்மார்ட்கனெக்ட் ப்ளாட்ஃபார்ம் மேம்பட்ட டிஎஃப்டி கிளஸ்டர் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் மொபைல் அப்ளிகேஷன் ஆகிய நவீன அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளை நிறத்தில், அட்டகாசமாக ஸ்டைலுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது மேலும், க்ரிஸ்டல் க்ளியர் எல்.இ.டி ஹெட்லேம்ப்கள், முழுவதும் எல்.இ.டி யினால் வடிவமைக்கப்பட்ட டெயில் விளக்குகள் மற்றும் ஒரு கண்களைக் கவரும் வகையில் ஒளிரும் லோகோ உடன் கம்பீரமாக தோற்றத்தைக் கொடுக்கிறது.

வாங்குவதற்கு முன்பாக டெஸ்ட் ரைடு மற்றும் ஜிட்டல் முன்பதிவு கிடைக்கும் வாய்ப்புகள டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக்கை அதன் வலைத்தளத்தின் மூலம் 5,000 ரூபாய் முன் பதிவு தொகையாக செலுத்தி முன்பதிவை மேற்கொள்ள முடியும்.  வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும் சௌகரியத்தையும் கருத்தில் கொண்டு வாகனங்களை விநியோகம் செய்வதை நேரடி மனித தொடர்பு இல்லாமல் வழங்கும் வசதியை தொடங்கியிருக்கிறது.

தற்போது, டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான சார்ஜிங் யூனிட்கள்  கோவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், கோயம்புத்தூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்களில், இன்று முதல் கிடைக்கும்.  இதன் ஆன் ரோட் விலை र. 1,15,218 ஆகும் [FAME II மானியத்திற்கு பிறகு]