இ.எஸ்.ஐ – க்கு ஸ்டரக்சர்களை வழங்கிய எம்.எல்.ஏ – க்கள்

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு தேவையான மூன்று ஸ்டரக்சர்களை கோவை தெற்கு தொகுதி மற்றும் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்.

சிங்காநல்லூரில் இயங்கி வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனை பிரத்யேகமாக கொரோனோ தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக கோவையில் உயர்ந்து வந்த கொரோனோ இரண்டாம் அலையின் வேகம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

இந்நிலையில் இன்று மருத்துவமனைக்கு வந்த கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் மூன்று ஸ்டர்க்சர்கள் மற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அணிவதற்கு தேவையான பாதுகாப்பு உடைகளை மருத்துவமனை முதல்வர் ரவீந்திரனிடம் வழங்கினர்.

தொடர்ந்து மருத்துவமனையை பார்வையிட்ட வானதி சீனிவாசன் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.