கலைஞரின் 98 வது பிறந்த நாள் : ஆலம் விழுதுகள் சார்பாக 500 பேருக்கு உணவு

கலைஞர் கருணாநிதி அவர்களின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆலம் விழுதுகள் அறக்கட்டளையின் சார்பாக 500 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

கோவை: கலைஞர் கருணாநிதி அவர்களின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆலம் விழுதுகள் அறக்கட்டளையின் தலைவரும் திமுக மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளருமான மீனா ஜெயகுமாரின் வழிகாட்டுதலின்படி, அண்ணாநகர், பீளமேடு, புதூர், கோவை அரசு மருத்துவமனை மற்றும் போத்தனூர் ஆகிய இடங்களில் தனது அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மூலமாக உணவின்றி கஷ்டப்படும்  500 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.