கொரோனா பாதித்தவர்களை அழைத்து செல்ல கார் ஆம்புலன்ஸ்

கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கு தலா 10 கார் ஆம்புலன்சுகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி தரப்பில் கூறப்படுவது:

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் போது மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ பரிசோதனை மையங்களை (Triage Centre )பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதற்காக கோவை மாநகராட்சி மூலம் 5 மண்டலங்களுக்கு தலா 10 கார் ஆம்புலன்ஸ் (TOYOTA INNOVA) ஒதுக்கீடு செய்யப்பட்டு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை மாநகராட்சி மூலம் உடனடியாக அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மருத்துவ பரிசோதனைக்காக கார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டு வருகிறார்கள்.

மேலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மேற்படி கார் ஆம்புலன்ஸ்களை உடனடியாக தொடர்புகொள்ள வேண்டியிருப்பின் 97505 54321 மற்றும் 0422-2302323 என்ற தொலைபேசி எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எவரும் பொது மக்கள் பயணிக்கக்கூடிய வாகனங்களிலோ அல்லது இரு சக்கர வாகனங்களிலோ செல்லக்கூடாது என மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.