இசையும், ராஜாவும்

இசை என்று சொன்னால் இளையராஜாவின் பெயர் அதில் இடம்பெறாமல் இருக்க முடியாது. அரை நூற்றாண்டு காலமாக தமிழ் சினிமாவில் இவர் பாடிய அனைத்து பாடல்களும் நம் எல்லா உணர்வுகளோடும் ஒன்றர கலந்து விட்டது. மனிதனின் உணர்வுகளை எவ்வாறு பிரிக்க முடியாதோ, அது போல இசையையும், ராஜாவையும் பிரிக்க முடியாது என்று அறுதியிட்டு கூறலாம். 44 ஆண்டுகளுக்கும் மேலாய் தனக்கான ஒரு தனி இசை நடையை வைத்திருக்கும் ராஜாவின் 78 வது பிறந்த நாள் இன்று.

தலைமுறைகளை தாண்டி இசைத்து வரும் இவர் பாடல்கள், அனைத்து வயதினருக்கும் ஒரு அருமருந்து. சோகம், உற்சாகம், காதல், பிரிவு, வழி என எல்லாவற்றையும் இவரின் பாடல் மூலம் கேட்டு ஆறுதல் தேடி கொள்ளலாம்.

ராஜாவின் இசை இல்லாத இரவுகளை இங்கு பெரும்பாலானோர் கழித்திருக்க முடியாது. “ஆயிரம் தாமரை மொட்டுகளில்” தொடங்கி 1000 படங்களுக்கு 7 ஆயிரம் பாடல்களை வழங்கி, இசைத்துறையில் தனிப்பெரும் ஜாம்பவானாக இன்று வரையிலும் திகழ்ந்து வருகிற ராஜாவின் இசை அலைகள் என்றுமே ஓய்ந்ததில்லை. தேசிய விருதுகள் தொடங்கி இவர் தட்டிசென்ற விருதுகளோ ஏராளம். இசையை கொண்டாடுபவர்கள் ராஜாவை கொண்டாடாமல் இருக்கமாட்டார்கள்.