கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த அமைச்சர்

கருமத்தப்பட்டி அருகில் உள்ள, தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 250 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சர் சக்கரபாணி இன்று (01.05.2021) துவக்கி வைத்தார்.

தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்றின் அளவு, வயது மற்றும் மருத்துவரின் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள பரிசோதனை மையங்கள் மூலம், அவர்களை சிறப்பு சிகிச்சை மையங்கள், மருத்துவமனைகள், ஆக்சிஜன் படுக்கை வசதிகளுக்கும் என தனித்தனியே பிரிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தனிமைபடுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்ந்த பகுதிகளிலே தங்க வைத்து சிகிச்சையளித்திடும் வகையில் புதிய கொரோனா தொற்று மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் 250 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்து, ஆய்வு மேற்கொண்டார்.