கொரோனா சிகிச்சைக்கு பயனளிக்கும் இயற்கை வைத்தியம்

கொரோனா சிகிச்சையில்  நமது பாரம்பரிய இந்திய  இயற்கை வைத்தியம் நல்ல முறையில் பயனளித்து வருவதாக கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளரும்  இயற்கை மருத்துவருமான எல்லுசாமி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்து வருவதோடு அதனால் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா சிகிச்சையில் சித்த மருத்துவ முறைகளும் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில்,கோவையை அடுத்த அத்திபாளையம் பகுதியில் ஆனந்தம் யோகா மற்றும் இயற்கை ஆரோக்கிய மையத்தை நடத்தி வரும்  யோகா பயிற்சியாளர் எல்லுசாமி கொரோனா சிகிச்சையில் தமிழ் பாரம்பரிய சிகிச்சைகள் குறித்து விளக்கமளித்தார்.

அப்போது அவர், யோகாவில் ஒரு பகுதியான மூச்சுபயிற்சியை தொடர்ந்து செய்வதால் நுரையீரல் நல்ல முறையில் இயங்கி மூச்சு காற்று விடுவது எளிமை ஆவதாகவும், மேலும் எளிதாக கிடைக்க கூடிய வேப்பிலையை வீடுகளில் வைப்பதால் ஆக்சிஜன் நல்ல முறையில் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், நமது சமையலறைகளில் உள்ள இஞ்சி, சீரகம், குருமிளகு, பூண்டு, மஞ்சள், கிராம்பு போன்ற பொருட்களில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ளதாகவும், இவற்றை ரசமாக செய்து சாப்பிட்டாலோ, ஆவி பிடிப்பதோலே கொரோனா வராமல் தடுப்பதோடு, அதற்கான சிகிச்சையிலும் பயனளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.