பசியால் வாடுபவர்களுக்கு உணவளிக்கும் சீமா மற்றும் நிழல் மையம்

கோவை பம்புசெட்டு உற்பத்தியாளர்களின் சங்கம் – சீமா மற்றும் நிழல் மையம் இணைந்து  ஆதரவற்றவர்கள், வயது முதிர்த்தோர், தொழிலாளர்கள் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள், பசியால் வாடும் அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு வழங்கி வருகின்றனர்.

கோவையில், ரயில் நிலையம், அரசு பொது மருத்துவமனை, இ.எஸ்.ஐ  மருத்துவமனை, சிங்காநல்லூர் பேருந்து நிலையம், உக்கடம், டவுன்ஹால், புளியகுளம் பகுதிகளில் உள்ள பசியால் வாடும் அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு வழங்குகின்றனர்.

தினமும் 4000 பேர்  இதன் மூலம் பசியாறுகின்றனர், கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள  பகுதிகளிலுள்ள  பல்வேறு அறக்கட்டளைகள், காப்பகங்களில் உள்ளவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

கொரனோ பெருந்தொற்று  காலங்களில் பாடுபடும் நிழல் மையத்தின் நிர்வாகிகள்,  தன்னார்வலர்கள் மற்றும் பொருளுதவி செய்துவரும் சீமாவின் அங்கத்தினர்கள் அனைவருக்கும் சீமாவின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதாக (சீமா) தலைவர்,  கே. வி. கார்த்திக், பத்திரிக்கை செய்தி வாயிலாக தெரிவித்துள்ளார்.