மகளிர் உடல் நலன் குறித்த கருத்தரங்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கணினி அறிவியல் துறை சார்பில் உலக குடும்ப தினத்தை முன்னிட்டு “Solutions for Common Gynecological Problems”  எனும் தலைப்பில்  இணைய வழியிலான கருத்தரங்கம் சனிக்கிழமை (15.5.2021) நடைபெற்றது. நிகழ்விற்கு முதல்வர் பாலுசாமி தலைமையுரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக மகளிர் நல மருத்துவர்  ரேணுகாதேவி கலந்து கொண்டு மகளிர் உடல் நலன் குறித்த செய்திகளை விளக்கிக் கூறினார்.  மகளிரின் நலன் பேண மேற்கொள்ள வேண்டிய  சுயபரிசோதனைகள் பற்றியும் குறிப்பாக மார்பகப் புற்று நோய், கர்ப்பகால பிரச்சினைகள், சிறுநீரகப் பிரச்சினைகள் மற்றும், மாதவிடாய் காலப் பிரச்சினைகள் போன்ற மகளிருக்கான நோய்கள்  அதற்கான விழிப்புணர்வு, தீர்வுகள்  பற்றி    விளக்கினார்.

இந்நிகழ்வில் பங்கேற்பாளர்களின் வினாக்களுக்கு தேவையான தீர்வுகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

இக்கருத்தரங்கில் அனைத்துத் துறைசார் பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள்   பங்கேற்றனர்.