மருத்துவ ஆக்சிஜன்  செறிவூட்டிகளை விமானம் மூலம் கொண்டு வந்த கிரீன்கோ குரூப்

ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் கிரீன்கோ குரூப், இந்தியாவுக்கு உதவும் பொருட்டு நிமிடத்திற்கு 10 லிட்டர்கள் திறன் கொண்ட 200 மிகப்பெரிய மருத்துவ  ஆக்சிஜன்  செறிவூட்டிகளைக் கொண்டுவரும் ஐந்து சரக்கு விமானங்களில்  முதலாவது விமானம் ஹைதராபாத்தில் இன்று (17.05.2021) தரையிறங்கி உள்ளது .

கிரீன்கோ குரூப் திட்டங்கள் குறித்து கிரீன்கோ குரூப் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர்  அனில் சலமலசெட்டி பேசுகையில்: ஐந்து சரக்கு விமானங்களில் முதலாவது இங்கு தரையிறங்கியுள்ளது. இன்னும் ஐந்து நாட்களில் ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி விமான நிலையங்களில் மீதமுள்ள நான்கு சரக்கு விமானங்கள் 1,000 மிகப்பெரிய மருத்துவ தரமுள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகளுடன் தரையிறங்கும்.

ஐசியூவுக்கு முந்திய நிலை மற்றும்  ஐசியூவுக்கு பிறகு நோயாளிகளின் நிலைத்தன்மை ஆகியவற்றில் நமது மருத்துவக் குழுவுக்கு உதவும் வகையில் இது பயன்படும்.  என்று தெரிவித்தார்.

கிரீன்கோ நிறுவனர்களின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய அமைச்சர் கே.டி.ராமாராவ், பேசுகையில்: ஒரு அரசாக, வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களாக, பொறுப்புமிக்க குடிமக்களாக, நோயாளிகளுக்கு உரிய நிவாரணத்தை  வழங்குவதற்கே முதல் முன்னுரிமை அளிப்போம்.  உண்மையில், இந்த முயற்சிகளுக்கு உதவியதற்காக கிரீன்கோ குரூப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

இது பற்றி பேசிய அனில் சலமலசெட்டி கூறுகையில்: வட்டார மற்றும் உலகளாவிய அளவில் ஆபத்துக்கால சாதனங்கள் மற்றும் பொருட்களைப் பெறும் நோக்கத்தோடு வலுவான விநியோகச் சங்கிலி அமைப்பை  உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். கிரீன்கோ குரூப்பில் உருவாக்கப்பட்ட விநியோகச் சங்கிலி அமைப்பானது 5,000-க்கும் மேற்பட்ட செறிவூட்டிகள் மற்றும் சிலிண்டர்களை தொடர்ச்சியாக சப்ளை செய்யும் திறன் கொண்டது  என்று தெரிவித்தார்.