சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் காலமானார்

சமீபகாலமாக சின்ன திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்துவரும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த் என மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பலர் சமீபத்தில் உயிரிழந்தனர். இந்நிலையில் பிரபல சீரியல் நடிகரான குட்டி ரமேஷ் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.

பிரபலமான சேனல்களில் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார் குட்டி ரமேஷ். தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தேன்மொழி BA ஊராட்சிமன்ற தலைவர் என்ற தொடரில் நாயகியின் தந்தையாக நடித்து வந்தார். நடிகர் குட்டி ரமேஷின் மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.