தடுப்பூசியும் செயல் இழக்கும் அபாயம் உள்ளது ! – டாக்டர் சவுமியா சுவாமிநாதன்

கொரோனாவால் பலரும் பல விதத்தில் பாதிக்கப்பட்டாலும் அதன் தாக்கம் குறையவில்லை. காரணம் அதன் வீரியம் அதிகமானதாலும், மக்களிடையே விழிப்புணர்வு குறைந்ததாலும் தான்.

இதன் குறித்த விழிப்புணர்வு பலரிடமும் குறைவாக இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா குறித்த பயம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.

“அதிக வீரியம் உடைய உருமாறிய கொரோனா வைரசால், இந்தியாவின் தொற்று பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தவறினால், தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளை கூட அது செயலற்றதாக்கிவிடக் கூடிய அபாயம் உள்ளது.

அப்படி நிகழ்ந்தால், அது இந்த உலகத்துக்கே அச்சுறுத்தலாக மாறிவிடக் கூடும்.” என, உலக சுகாதார அமைப்பினர் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் எச்சரித்துள்ளார்.

கொரோனா நோயாளியின் மூச்சுக் காற்றில் இருந்து வெளியேறும் இந்த சிறு திரவ துகள்கள், நோய் பரப்பும் அபாயம் உள்ளவை. எனவே, நோயாளியிடம் இருந்து, 3 – 6 அடி தூரத்தில் நிற்பது கூட தொற்றை ஏற்படுத்தக் கூடும்.

இதனால் அவசியமின்றி வெளியே செல்வதை தவிர்த்து, முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றினால் இதனால் பாதிப்பை தவிர்க்கலாம்.