வாக்கு எண்ணிக்கை நடத்தக்கூடாது : புதிய தமிழகம் கட்சியினர்

சட்டமன்ற தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதால்  வாக்கு எண்ணிக்கையை நடத்தக்கூடாது என்று புதிய தமிழகம் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று (26.4.2021) மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து அக்கட்சியின் மாவட்ட தலைமை முகவர் சங்கர் குரு கூறியதாவது:

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில்  பாரபட்சமின்றி அனைவரும் ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை பணம் மற்றும் பரிசு பொருள் கொடுத்தனர். நாங்கள் 60 தொகுதிகளில் போட்டியிட்டோம். பல தொகுதிகளில் முறைகேடுகள் குறித்து புகார் அளித்தோம். ஆனால், புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

பணம் கொடுத்தால் வாக்கு வாங்கலாம் என்ற போக்கு இருந்தால் சாமானியர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே தேர்தல் வாக்கு எண்ணிகையை நடத்த கூடாது. முழுமையாக் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுத்து மறு தேர்தல் நடத்த வேண்டும்.  இந்த காலகட்டத்தில் ஆளுநர் ஆட்சியை அமல் படுத்தவும் எங்கள் கட்சி தலைவர் கோரிக்கை வைத்திருந்தார். அதன்பேரில் இன்று ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்.