உடற் கட்டமைப்பின் மூலம் உடல்தகுதி – சிறப்புக் கருத்தரங்கம்

கே.பி.ஆர்  கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் விளையாட்டுத் துறை சார்பில்  “உடற் கட்டமைப்பின் மூலம் உடல் தகுதி” எனும் தலைப்பில் இணைய வழி கருத்தரங்கம்  இன்று (24.4.2021)நடைபெற்றது.

நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி  தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அமைச்சூர் உடற்கட்டமைப்புச் சங்கத்தின்  செயலர், அரசு, ஐ.சி.ஃப் (ICF)  கலந்துகொண்டு சிறப்புரை வழங்கி பேசியதாவது: ஆணழகன் பயிற்சிபெறும் பயிற்சியாளர்களும், மாணவர்களும்   தனது உடலையும் மனதையும் உறுதிபட வைப்பதற்கு நீண்ட நாட்கள் நல்ல ஆயுளுடன் வாழ்வதற்கு உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று எடுத்துரைத்தார். உணவுமுறைகளின் முக்கியத்துவம், ஊட்டச் சத்துமிக்க உணவுகள் பற்றி  மாணவர்களுக்கு விளக்கினார்.

மேலும், உடற்பயிற்சி, நல்லஉணவு, முறையான உறக்கம், கடின உழைப்பு, இவற்றை முறையாக கடைபிடித்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்று கூறினார். தசை மற்றும் தசைநார்களை வலுப்படுத்துதல் தொடர்பாகவும் ஆணழகன் விளையாட்டுப் போட்டிகளில் உள்ள வேலை வாய்ப்பு, கல்வி வாய்ப்புகள்  குறித்தும் எடுத்துரைத்தார்

இதில் பேராசிரியர்கள், விளையாட்டுத் துறை வீரர்கள் மற்றும் மாணவர்கள் 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.