“நம்ம ஓட்டு தாமரை” என்று வானதிக்கு ஆதரவு திரட்டும் வட இந்திய பெண்கள்

“நம்ம ஓட்டு தாமரை” என்று அழகிய தமிழில் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு திரட்டும் வட இந்திய பெண்கள். தெற்கு தொகுதியில் வாக்குகள் சேகரிக்கும் வானதி சீனிவாசன்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். கடந்த ஒரு வார காலமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர் தெற்கு தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று சுக்ரவார் பேட்டை பகுதியில் வட இந்திய பெண்கள் “வானதி அக்கா ஜிந்தகி சொக்கா” என்ற முழக்கங்களுடன் ஆதரவு திரட்டிய நிலையில் செவ்வாய்க்கிழமை இன்று (23.3.2021) பூ மார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக சுக்ரவார் பேட்டை பகுதியில் உள்ள வட இந்தியப் பெண்கள் 20க்கும் மேற்பட்டோர் “நம்ம ஓட்டு தாமரை” என்று தமிழில் முழக்கமிட்டபடி ஆதரவு திரட்டினர்.