காய்கறி விற்பனை செய்து வாக்கு சேகரித்த கே.ஆர் ஜெயராமன்

கோவை, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் கே.ஆர் ஜெயராமன் காய்கறிகளை விற்பனை செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் கே.ஆர்.ஜெயராமன் போட்டியிடுகிறார். தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் இவர் திங்கள்கிழமையன்று (22.3.2021) பீளமேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில், செங்காளியப்பன் நகர் காய்கறி சந்தைக்கு சென்ற அவர், அங்கு இருந்த ஒரு காய்கறி கடையில் அமர்ந்து பொதுமக்களுக்கு காய்கறிகளை விற்பனை செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.