ரயில் மோதி உயிருக்கு போராடிய யானை உயிரிழப்பு

கோவை நவக்கரை அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானை ஒன்று அவ்வழியாக வந்த திருனந்தபுரம் – சென்னை விரைவு மோதியதில் திங்கட்கிழமை (15.3.2021) படுகாயமடைந்தது.

இதையடுத்து படுகாயமடைந்த யானைக்கு வனத்துறையினர்  கால்நடை மருத்துவ குழுவினருடன் சிகிச்சையளித்தனர்.

சிகிச்சையை மேலும் துரிதப்படுத்த   யானையை ஆலாந்துறை அடுத்த சாடிவயல் கிராமத்தில் உள்ள கும்கியானை முகாமிற்கு மாற்ற மருத்துவ குழு முடிவு செய்து கடந்த மூன்று நாட்களாக கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்து வந்தனர்.

தலை, முகம், படுகாயமடைந்து, யானையின் இடுப்பு பகுதிகள் முழுமையாக செயல்படாமல் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய யானை நேற்று (17.03.2021) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

தொடர்ந்து அதே பகுதியில் யானைக்கு உடற்கூறு ஆய்வு செய்து அடக்கம் செய்வதற்கான பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டனர்.

மேலும் வால்பாறை, சிறுமுகை, போளுவாம்பட்டி, மதுக்கரை சரகங்களில் கடந்த 5 நாட்களில்  4 காட்டு யானைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.