இளைஞர்கள் வாக்களிக்க முன்வரவேண்டும் – இளம் சுயேட்சை வேட்பாளர்

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் வாக்களிக்க  முன்வரவேண்டும் என  கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும்   இளம் சுயேட்சை  வேட்பாளர் கேட்டு கொண்டுள்ளார்.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்.25 வயதான இவர், சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக  போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

காங்கிரஸ்,பா.ஜ.க, மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்வர்  வேட்பாளர் கமலஹாசன், ஆகியோர் போட்டியிடும் கடுமையான  சூழலில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்க உள்ளார்  செல்வகுமார்.

இது குறித்து அவர் கூறுகையில், கடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாகவும், குறிப்பாக வாக்கு சதவீதத்தை அதிகரிக்க இளைஞர்கள் வாக்களிக்க முன்வர வேண்டும் என கூறினார். மேலும் கொரோனா பரவல் தற்போது அதிகம் பரவி வருவதால், சமூக வலைதளங்களில்  அதிக அளவில் பிரச்சாரம் செய்ய போவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக அளவில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் வயது குறைந்த இளைஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.