அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை   

கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பு மற்றும் தடுப்பூசி நிலவரங்கள் குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் இன்று (17.03.2021) காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்றார்.

இதில் கொரோனா தடுப்பூசி பணிகளை விரைந்து செயல்படுத்துவது மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

காணொளியில் பிரதமர் மோடி பேசியதாவது, இப்பொழுது இந்த பெருந்தொற்றை நாம் தடுக்கா விட்டால் உலகம் முழுவதும் பாதிப்பு அதிகரிக்கும் சூழல் ஏற்படும் எனவும்  கொரோனா பரவல்  குறித்த அச்சம் மக்களிடையே பரவாமல் தடுப்பது அரசின் கடமை என்றும் கூறினார் .

கொரோன தொற்றின் இரண்டாம் அலை உருவாவதை தடுக்க அனைத்து மாநிலங்களும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். மேலும் கொரோனா தடுப்பூசிகளின்  காலாவதி தேதி முடியும் முன்பே அதை உபயோகப்படுத்துமாறு அறியுறுத்தினார்.  கொரோனவால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது என்றார்.