கோவை தெற்கு தொகுதியில் மாற்றத்தை செய்து காட்டுவேன் – பொதுகூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் வரவிருக்கும் சட்ட சபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். 

மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று மாலை கோவை ராஜாவீதி, தேர்முட்டியில் ‘மண் மொழி காக்க மாபெரும் பொதுக்கூட்டம்’ நடைபெற்றது.

கூட்டத்தில் கமல் உடன் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன், மற்றும் கட்சியின் பல்வேறு வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய கமல் ஹாசன் ‘சினிமாவில் நான் செய்த மாற்றத்தை கோவை தெற்கு தொகுதியில் நான் செய்துகாட்டுகிறேன்…’ என்று பதிவு செய்தார்.