யாழ்க்குதிரை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்

கோவையில் நடைபெற்ற யாழ்க்குதிரை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

சென்னைக்கு அடுத்த படியாக தமிழகத்தில் படப்பிடிப்புகள் அதிகம் நடைபெறும் மாவட்டமாக கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் உள்ளது. திரைப்படம் தொடர்பான இசை வெளியீடு, படத்துவக்க விழாக்களும் தற்போது அதிகம் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்  பி.கே.துரைசாமி தயாரிப்பில் இமயராஜா இயக்கி, ஜெயப்பிரகாஷ் இசையமைத்துள்ள ‘யாழ்க்குதிரை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவை கணுவாய் பகுதியில் நடைபெற்றது. இதில் யாழ்க்குதிரை படத்தில் பணியாற்றிய கலைஞர்கள், நடிகர், நடிகைகள் என அனைவரும் குடும்பத்துடன் கலந்து இசைத்தட்டை வெளியிட்டனர். விழாவில், படத்தின் ஒளிப்பதிவாளர் திருப்பதி, எடிட்டர் மாரீஸ், கோவை மாவட்ட நடிகர் சங்க தலைவர் சாகுல், மற்றும் நடிகர் நடிகைகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் இமயராஜா பல்வேறு கட்டங்களாக இதில் பணியாற்றிய அனைத்து நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களுக்கு தமது நன்றியை தெரிவிப்பதாகவும், ஏழை, பணக்காரர்களிடையே உள்ள வித்தியாசத்தை தமது திரைப்படத்தில் அனைவருக்கும் புரியும் வகையில் இயக்கியுள்ளதாக தெரிவித்தார். விழாவில் படத்தில் பணியாற்றிய தங்களது அனுபவங்கள் குறித்து படத்தின் கலைஞர்கள் பேசினர்.