டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரிக்கு ‘A+’ தரவரிசை

டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரி, தரமான கல்விச்சேவைகளை வழங்கி வருவதற்காக தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார சபை (NAAC)  பிப்ரவரி 15 அன்று ‘A+’ தரச்சான்று வழங்கியுள்ளது.

மத்திய பிரதேசம், புது டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த ஆய்வு குழு பிப்ரவரி 8 மற்றும் 9 ஆகிய நாட்களில் பரிந்துரைக்கப்பட்ட அளவுருக்களை முன்னிறுத்தி இரண்டாம் சுழற்சி அங்கீகாரத்திற்கான விரிவான ஆய்வினை   மேற்கொண்டு இந்த தர வரிசையினை இக்கல்லூரிக்கு வழங்கியுள்ளது.

கல்லூரியின் முதல்வர், ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு  கோவை மருத்துவ மைய மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி  செயலாளர் தவமணி பழனிசாமி  மற்றும் கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் புவனேஸ்வரன்  ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

4 புள்ளிகள் அளவில் 3.36 புள்ளிகள் எடுத்து ‘A+’ தரச்சான்று பெற்ற டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்பக்  கல்லூரிக்கு பெருமைமிகு தருணம் என கல்லூரி முதல்வர்  பொற்குமரன்  கூறினார்.