கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் : உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில்  உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று (09.02.2021) நடைபெற்றது.

கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் கூடுதல் ஆணையர் செந்தில் குமாரி தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. “கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழித்திடும் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும் கொத்தடிமை தொழிலாளர் முறை எந்த தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன்.” என்று உறுதி மொழி ஏற்றனர்.

இந்தியாவில் 1976 ஆம் ஆண்டு கொத்தடிமை தடுப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை பிப்ரவரி மாதம் 9ம் தேதி தொழிலாளர் நலத் துறையினர் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்றுக் கொள்வார்கள்.

இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் லீலாவதி, உதவி ஆணையர்கள் வெங்கடேசன், பிரேமா மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.