ரெலா மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் 99.2 சதவீதம் பேர் உயிர் பிழைத்துள்ளனர்

கோவை, ரெலா மருத்துவமனை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை படைத்து வருகிறது. கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் உலக அளவில் 90 சதவீதம் பேர் உயிர் பிழைக்கின்றனர். ஆனால் ரெலா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் 99.2 சதவீதம் பேர் உயிர் பிழைத்துள்ளனர். கொரோனா தொற்று பரவல் காலத்திலும் இம்மருத்துவமனை இந்த சிகிச்சையை சிறப்பாக மேற்கொண்டுள்ளது. மேலும் உலக அளவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறந்த மருத்துவமனையாக இது அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கல்லீரல் மாற்று சிகிச்சையில் இம்மருத்துவமனை நவீன சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக இங்கு சிகிச்சை மேற்கொண்டு உயிர் பிழைத்தோரின் சதவீதமானது 99.2 ஆக உள்ளது. தேசிய பயோடெக்னாலஜி தகவலின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1000 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெறுகிறது. இதில் 90 சதவீதம் பேர் மட்டுமே உயிர் பிழைக்கின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று துவங்கிய நாள் முதல் இன்று வரை ரெலா மருத்துவமனையில் 120 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 99.2 சதவீதம் நோயாளிகள் உயிர் பிழைத்துள்ளனர்.

இது குறித்து ரெலா மருத்துவமனை தலைவர் முகமது ரெலா கூறுகையில்,  நாங்கள் சரியான திசையில் பயணிக்கிறோம். இந்த சிகிச்சை முடிவுகளால் நாங்கள் மிகவும்  பெருமிதம் கொள்கிறோம். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் உலக அளவில் உயிர் பிழைப்போர் எண்ணிக்கை 90 சதவீதமாக உள்ளது. உலகத் தரத்துடன் எங்கள் மருத்துவமனையை ஒப்பிடுகையில் இந்த சதவீதமானது அதிகமாக உள்ளது.

முந்தைய காலங்களில் கல்லீரல் மாற்று சிகிச்சை தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் நோயாளிகளுக்கும் அதற்கு பரிந்துரை செய்யும் டாக்டர்களுக்கும் இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொழில்நுட்பமானது மேம்பாடு அடைந்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் உலக அளவில் 90 சதவீதமாக உள்ள உயிர் பிழைப்போர் எண்ணிக்கையானது ரெலா மருத்துவமனையில் 99.2 சதவீதமாக உள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று நான் நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

இது குறித்து ரெலா மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கூறுகையில், கல்லீரல் மாற்று சிகிச்சையில் எங்கள் மருத்துவமனையின் செயல்பாடானது ஆண்டுக்கு ஆண்டு நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. நோயாளியை நல்ல முறையில் கவனித்தல், புதுமையான சிகிச்சை முறைகள் மற்றும் சிக்கலான பிரச்சினைகளுக்கு ஒரு செயல்திறன்மிக்க இடைநிலை பராமரிப்பு திட்டம் ஆகியவற்றால் நாங்கள் இந்த வெற்றியை எட்டியுள்ளோம். மேலும் இந்த வெற்றியானது அயராத உழைக்கும் எங்களின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை குழுவினருக்கு கிடைத்த சிறப்பான அங்கீகாரம் ஆகும் என்று தெரிவித்தார்.