தொழில், நிர்வாகம் சார்ந்த பிரச்னையை சொல்லுங்க, தீர்வைத் தருகிறோம்

வாழ்க்கை என்பது பிரச்னைகளால் மட்டும் சூழ்ந்தது அல்ல. அது ஒரு அழகான கண்ணாடி. அந்த அழகான கண்ணாடியின் பாதரசமாக இருப்பது ‘‘வேலை’’. ஒருவருக்கு சரியான வேலையும் அதன்மூலம் எந்தவிதமான பிரச்னைகளும் இல்லாத சூழலும் அமைந்துவிட்டால், அவரது வாழ்க்கை இன்பமயமாக இருக்கும். சரி, ஆனால் அவ்வாறான இன்பமயமான பணிச்சூழல் எல்லோருக்கும் அமைவதில்லையே.

உதாரணமாக, ஒரு தொழில் தொடங்கினால் அல்லது தொடர்ந்து இயங்கிவரும் தொழிலில் சட்ட சிக்கல்கள், வரி தொடர்பான பிரச்னைகள், தற்போதைய ஜிஎஸ்டி வரி, நிதி மற்றும் வங்கிப் பிரச்னைகள், நிலம், கட்டடம், வருவாய் மற்றும் போலீஸ் தொடர்பான பிரச்னைகள், தொழிலாளர் பிரச்னைகள், சுற்றுச்சூழல் பிரச்னைகள், உழைப்பு மற்றும் செயல்முறைத் தணிக்கை எனப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.

இப்பிரச்னைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது, இதிலிருந்து எப்படி தப்பிப்பது, பிரச்னைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் எல்லோருக்கும் நிபுணத்துவம் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. சுமூகமான பணிச்சூழலையும் நல்லதொரு வருமானத்தையும் வளமான எதிர்காலத்தையும் கனவுகண்டு தொழில் நடத்தும் தொழிலதிபர்கள், வியாபாரிகள் மற்றும் தொழில்முனைவோர்கள் திடீரென ஏற்படும் மேற்கூறிய பிரச்னைகளால் நிலைதடுமாறுவது இயல்பு.

இன்னலான சூழ்நிலைகளில் ‘மனம் தளராதே, வீழ்ந்து விடாதே, வெற்றிப் பாதையில் உன்னுடைய நிழலாகவும், உன் முன்னேற்றத்திற்குத் தூண்டுதலாகவும் என்றும் உன்னுடன் பயணம் செய்வேன்’ என்று ஊக்கமளிக்கும் வார்த்தைகளுடன் மட்டுமல்லாது செயலாலும் சாதனை புரிந்துவரும் ஒருவர்தான் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளரும் டிஎன்பிஎஸ்சி உறுப்பினருமான ‘‘எஸ்எஸ் குளோபல்’’ நிறுவனர் வி.ரத்னசபாபதி. இவர் எம்பிஏ, எல்எல்பி மற்றும் எம்பிஎல் பட்டங்கள் பெற்ற ஒரு திறமையான அதிகாரி.

‘எஸ்எஸ் குளோபல்’ நிறுவனம் தொடங்கி சிறிது காலம்தான் ஆகிறது. எனினும், அச்சிறிய காலகட்டத்திற்குள் இவர் முன்னின்று தீர்த்துவைத்த பிரச்னைகளும் செய்துகாட்டிய நற்பணிகளும் ஏராளம். பணியாளர்களுக்கு, வியாபாரிகளுக்கு, முதலாளிகளுக்கு மற்றும் பிற தொழில்சார்ந்த அலுவலகங்களுக்கு, அவர்களில் ஒருவராக, அவர்களது பிரச்னைகளுக்குத் தீர்வு வழங்கி நல்வழிகாட்டி வருகிறார்கள் ரத்னசபாபதி மற்றும் அவரது குழுவினர்.

இவரது ‘எஸ்எஸ் குளோபல்’ நிறுவனத்தின் தாரக மந்திரம், ‘‘எல்லா பிரச்னைகளுக்கான நிரந்தர தீர்வு”. ஒருவருக்கு பிரச்னை வரும்போதுதான் அதன் வீரியம், வலியால் உணரப்படும். அவ்வேளையில் அவருக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது உடனடியாகத் தோன்றாது. இதுபோன்ற சூழ்நிலையில் ஆசையோடு ஆரம்பித்த தொழிலையே விட்டுச்சென்றவர்களும் உள்ளனர்.

ஆனால் வியாபாரத்தில், தொழிலில் மற்றும் தொழிலகங்களில் ஏற்படும் எந்த ஒரு பிரச்னைக்கும் நிரந்தர தீர்வு உண்டு. ஆனால் அந்தத் தீர்வுகளை நாம்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இல்லையெனில், தீர்வுகளை வழங்கும் சிறந்த ஆலோசகர்களை நம்வசம் வைத்திருக்க வேண்டும்.

இதுகுறித்து அவர் நம்மிடம் கூறியதாவது, ‘‘எங்கள் நிறுவனத்தில் தொழில் ரீதியான அனைத்துப் பிரச்னைகளுக்கும் அனுபவம் வாய்ந்த சிறப்பு உயர் அதிகாரிகளைக் கொண்டு, ‘பிரச்னைக்கேற்ற சிறந்த தீர்வுகளை’ வழங்கி வருகிறோம்.

பொதுவாக, ஒரு தொழில் தொடங்குபவர்கள் அத்தொழில் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆனால், தற்போது பலரும் அதில்தான் ஏமாந்து விடுகிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலம் வாங்கித்  தொழில் துவங்குகிறோம் என்றால், முதலில் அந்த நிலம் யாருடையது? அந்த இடம் நமது தொழிலுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டிருக்கிறதா? நிலத்தின் ஆவணங்கள் சரியாக இருக்கிறதா? முறையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? முக்கியமாக, அங்கே வில்லங்கம் ஏதும் இருக்கிறதா? அரசு கையகப்படுத்தும் திட்டம் ஏதும் உள்ளதா? ஆக்கிரமிப்பு உள்ளதா? நில வகை என்ன? என்பதை அறிய வேண்டும்.

ஆனால், எவ்வளவு விழிப்புணர்வாக இருந்தாலும் இதுபோன்ற விஷயங்களில் சற்று தடுமாற்றமும், ஏமாற்றமும் பலருக்கு நேருவது இயல்பு. இந்நிலையில் நாங்கள், இதுபோன்ற பிரச்னைகளில் தேர்ச்சியும் அனுபவமும் பெற்ற ஒரு தனிக்குழு அமைத்து செயல்பட்டு வருகிறோம். நிலம், கட்டுமானம் சம்பந்தமாக வரும் எந்த ஒரு பிரச்னைக்கும் எங்களிடம் நிரந்தரத் தீர்வு உள்ளது.

நிலம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் அமையப்பெற்று, ஒரு நிர்வாகம் சரியாக இயங்கும் தருணத்தில், நிர்வாகத்தில் ஏற்படும் சட்ட சிக்கல்கள், தொழிலாளர் பிரச்னைகள், வருவாய் பிரச்னைகள் போன்றவை ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. இதனை சரி செய்ய அந்தந்தத் துறை சார்ந்த முன் அனுபவம் மிக்க உயர் அதிகாரிகளைக் கொண்டு தீர்வு வழங்கி வருகிறோம்.

அதேபோல், ஒரு நிறுவனத்தின் ஆணிவேர் என்பது கணக்குத் துறை. அதில் ஏற்படும் இன்னல்கள் பற்பல. பொதுவாக அந்த இன்னல்கள் ஆடிட்டிங் மூலமாகவோ, வங்கிக் கணக்குகள் மூலமாகவோ அல்லது ஏற்றுமதி, இறக்குமதி சட்டங்கள் அல்லது விதிகள் மூலமாகவோ ஏற்படும். இதில் ஒரு தனிநபர் மூலம் நிச்சயம் தீர்வு காண முடியாது.

அது பற்றிய சிறந்த ஆய்வும், அந்த பிரச்னையில் தீர்வு காண சட்ட ரீதியான நுணுக்கமும் தெரிந்திருக்க வேண்டும். அவ்வகையில் எங்களிடம் உள்ள தேர்ந்ததொரு ஒரு குழுவின் மூலம் பிரச்னைக்கான பொருத்தமானத் தீர்வை வழங்குகிறோம்.

அதேபோல், பல முன்னணி நிறுவனங்கள் அவர்களுக்குத் தேவையான முக்கிய அலுவலர்களின் / பணியாளர்களின் விபரங்கள் (தகுதிகள், சம்பள விபரம்) ஆகியவற்றைக்  கொடுத்துவிட்டால் குறுகிய காலத்தில் அவர்களது  பணித்தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்று உத்திரவாதம் வழங்குகிறோம். இதற்கு எடுத்துக்காட்டாக, சமீபத்தில் எங்களிடம் உயர் அலுவலர் வேண்டி வந்து, ஒரு நிறுவனத்திற்கு அவர்கள் பாராட்டத்தக்க வகையில் ரூ.34,00,000 லட்சம் ஊதியத்தில் திறமை மிகுந்த ஒருவரை பணியாளராக பெற்றுக் கொடுத்திருக்கிறோம். இதற்கு முக்கிய காரணம், ஒவ்வொரு துறை சார்ந்த நிறுவனங்களுடன் எங்களுக்குண்டான தொடர்பும், அணுகுமுறையும்தான்.

மற்றொரு முக்கிய விஷயத்தையும் தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். தற்போதைய கணினி யுகத்தில் தகவலைப் பரிமாறும் பெரிய ஊடகமாகத் திகழ்வது முகநூல் (Facebook) இதனை சரியாகப் பயன்படுத்தினால் எல்லோருக்கும் நன்மை. தீய வழியில் பயன்படுத்தினால் பின்விளைவுகள் அதிகம். இதனை, தற்போதைய இளம்தலைமுறையினர் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். இதை நான் இங்கே கூறக் காரணம் இருக்கின்றது.

கோவையைச் சேர்ந்த ஒரு முன்னணி நிறுவன உரிமையாளர் ஒருவர் எங்களிடம் வந்து, சமூக வலைத்தள ஊடகங்களில் தங்களது நிறுவனத்தைப் பற்றி தவறான செய்தியைப் பரப்புகின்றனர். இதற்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில், அந்தத் தகவலைப் பகிர்ந்தது யார்? பகிர்ந்த குழுவின் நிறுவனர் (group admin)

யார் என்று கண்டுபிடித்து, அந்தத் தகவல் பரிமாற்றத்தை சட்டப்படி நிறுத்தினோம்.

எனவே சமூக ஊடகங்களில் நீங்கள் ஒரு தகவலை பரிமாறுவதற்கு முன், அது எப்படிப்பட்ட தகவல், அதனால் என்ன பின்விளைவுகள் சந்திக்க நேரிடும் என்பதை யோசித்து முடிவெடுங்கள். உண்மையில் சொல்லப்போனால், தற்போது பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களை நன்கு புரிந்து கொண்டு நல்ல முறையில் பயன்படுத்துபவர்கள் வெறும் 5% தான். இன்னும் வெளியில் வராத சமூக ஊடகம் வழியான பிரச்னைகள் ஏராளம் உள்ளன. அவற்றை எவ்வாறு கையாள்வது என்பதற்கான சிறப்பு புலனாய்வுக் குழு எங்களிடம் உள்ளது.

தொழில் ரீதியாக வரும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு வழங்குவதோடு உரிய ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம். இன்றைய தலைமுறையினர் வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று பல விஷயங்களில் கண்மூடித்தனமாக முதலீடு செய்து இறுதியில் தோல்வி அடைகிறார்கள். அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததால்தான், இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படுகின்றன.

தற்போது இயங்கி வரும் பல முன்னணி நிறுவனங்களில் Trade Mark மற்றும் Copy Rights விதிகளை சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. எனவே அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் என்பது இல்லை. இந்நிலையில் அந்நிறுவனங்களுக்கு அத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழு அமைத்து, அவர்கள் பிரச்னையில் இருந்து விடுபட நிரந்தரத் தீர்வு வழங்குகிறோம்.

தற்போது அமல்படுத்தப் படும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) சம்பந்தமான அனைத்து சட்ட நுணுக்கங்களையும் கையாளக் கூடிய அனுபவமிக்க, தற்சமயம் பணிமூப்பு பெற்ற மத்திய, மாநில அரசின் உயர் அதிகாரிகள், ஆடிட்டர்கள், வழக்குரைஞர்கள் அடங்கிய மிகச்சிறந்த குழுவும் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

தற்போது நாட்டில் உள்ள நிலைமையும், அதனால் ஏற்பட்ட விழிப்புணர்வாலும் எந்தவொரு நிறுவனத்தையும் முழுமையாக நம்ப மக்கள் முன்வருவதில்லை. காரணம், நம்பிக்கையின்மை, போலித்தனங்களைக் கண்டு சலித்துப்போன உணர்வு.

ஆனால் திறமையும் அனுபவமும் வாய்ந்த எங்கள் பணிக் குழுவினரைக் குறித்து நீங்கள் அறிந்துகொண்டால் எங்கள் நிறுவனத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை தானே வரும் என்பது உறுதி.

எங்கள் குழுவின் சில முக்கிய நபர்களை இங்கே அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திரு. சி.முத்துகுமாரசாமி அவர்கள், முன்னாள் மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு.ஜெ.ராகவன் அவர்கள், முன்னாள் மாவட்ட வருவாய் அதிகாரி திரு. அ.நாராயணமூர்த்தி அவர்கள், TNEB முன்னாள் தலைமை பொறியாளர் திரு. ஏ.தங்கவேலு அவர்கள், எஸ்பிஐ வங்கிப் பொது மேலாளர், தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் (Nationalized Bank) தலைமை கண்காணிப்பு அதிகாரியாகப் பணியாற்றிய திரு.பி.மயில்சாமி அவர்கள், நிறுவனச் செயலாளர் மற்றும் வழக்குரைஞர், நிதி நிபுணர் திரு. எஸ்.கார்த்திக் அவர்கள், சென்னை நகரின் முதல் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.பாலு -அவர்கள், முன்னாள் சிவில் வழக்கு மற்றும் குற்றவியல் இயக்குனர் மற்றும் சட்ட நிபுணர் திரு. பி.பாலசுப்பிரமணியன் -அவர்கள், பொறியியல் பட்டதாரி மற்றும் புத்திசாலித்தனம் மிக்க வழக்குரைஞர் திருமதி சிந்து அருண்குமார் அவர்கள்.

இதுபோல், இன்னும் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் தலைமைப் பொறுப்பு வகித்த அனுபவமும் திறமையும் வாய்ந்த அதிகாரிகளைக் கொண்டு எங்கள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

எஸ்எஸ் குளோபல் நிறுவனம் உங்களது எல்லா பிரச்னைகளுக்கான கடைசி இலக்காக மட்டுமல்ல, அறிவுசார் தொழில் நுணுக்கமும் கொண்ட சட்டப்படியான அமைப்பாகவும் செயல்படுகிறது. எனவே, இனி உங்கள் நிறுவனத்தில், அலுவலகத்தில் ஏற்படும் பிரச்னைகளைக் கண்டு நீங்கள் தயங்கவோ, கலங்கவோ தேவையே இல்லை. பொறுமையாக உங்கள் பிரச்னையை எங்களிடம் சொல்லுங்கள். தீர்க்கமான தீர்வை சட்டப்படி தந்து நிம்மதியான தொழில்சூழலை உருவாக்க நாங்கள் உதவுகிறோம்’ என்றார்.

இவர்களது அலுவலகம் கோவை ரேஸ் கோர்சிலும், சென்னை லாயிட்ஸ் ரோடு (ராயப்பேட்டையிலும்) அழகிய, தனிக்கட்டிடங்களில் கார்ப்பரேட் அலுவலக பாணியில் இயங்குகிறது.

மற்ற விபரங்களை www.ssgv.in. மின்னஞ்சல்: info@ssgv.inல் பெறுங்கள்.

  • மேகலா நடராஜ்.