தியாகி பனாரசி தாஸ் குப்தா பிறந்த தினம்

சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமான பனாரசி தாஸ் குப்தா 1917ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி ஹரியானாவில் உள்ள ஜீந்த் மாவட்டத்தில், பிவானி என்ற இடத்தில் பிறந்தார்.

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டதால் 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியா விடுதலை அடைந்த பிறகு ஜீந்த் பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திய இவர், சர்தார் வல்லபாய் படேலுடன் இணைந்து அதை சாதித்தார்.

1968ஆம் ஆண்டு நடைபெற்ற பிவானி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். 1972ஆம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்றார். மின்சாரம், பாசனம், விவசாயம், சுகாதாரம் ஆகிய பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார். 1975ஆம் ஆண்டு ஹரியானா முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஆட்சிக்காலத்தில் ஹரியானா மாநிலம் பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டது.

இவர் பாபுஜி என்று அன்போடு அழைக்கப்பட்டார். நாட்டு முன்னேற்றத்தையும், தேசிய ஒருமைப்பாட்டையும் கருத்தில் கொண்டே செயல்பட்டவர். சமூக மேம்பாடு, கல்வி, இலக்கியம் ஆகிய பல களங்களில் முனைப்புடன் பாடுபட்ட பனாரசி தாஸ் குப்தா 2007 ஆம் ஆண்டு மறைந்தார்.