தலாய் லாமா கலந்துகொண்ட நிகழ்வில் வேலம்மாள் மாணவி

தலாய் லாமா தலைமையில் நடைபெற்ற உலகளாவிய நேரடி வலைபரப்பு நிகழ்வில் பருத்திப்பட்டு வேலம்மாள் பள்ளி மாணவி பங்கேற்பு.

சர்வதேச Dr.A.P.J அப்துல் கலாம் பேரவை சார்பில் முன்னாள் இந்திய ஜனாதிபதி A.P.J. அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னட்டு மாபெரும் சர்வதேச நேரடி வளைபரப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் திபெத் புத்தமத தலைவர் தலாய் லாமா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் பல நாடுகளில் இருந்து பள்ளி மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

உலக அமைதியும் நல்லிணக்கத்தையும் மேற்கோளாக கொண்டு வலைப்பரப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாணவர்களுக்கான கேள்வி பதில் அமர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல நாடுகளை சேர்ந்த மாணவர்களோடு பருத்திப்பட்டு வேலம்மாள் பள்ளி சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பை சேர்ந்த மாணவ பேரவை தலைவி கீர்த்திதா கலந்துகொண்டார்.