50வது தேசிய நூலக வாரவிழா

கோவை மாவட்ட மைய நூலகத்தில் 50வது தேசிய நூலக வாரவிழா இன்று (16.11.17) நடைபெற்றது. முதல்நிலை நூலகர் பே.ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமை வகித்து பல அரிய வகை நூல்கள், ஓலைச்சுவடிகள், நன்கொடை நூல்கள் பொதுமக்களிடமிருந்து நன்கொடையாக பெறும் திட்டத்தை துவக்கி வைத்தார். மேலும், விழாவில் வினாடிவினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர் ப.ஜெயகாந்தி, வாசகர் வட்ட தலைவர் டி.எஸ்.சிவா, மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் கே.கருணைவேந்தன், துடியலூர் தமிச்சங்கத்தின் தலைவர் கா.ப.கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில், பழ.தரும ஆறுமுகம் 350 நூல்களும், கா.ப.கலையரசன் 3 நூல்கள் மற்றும் மாவட்ட மைய நூலகத்திற்கு ரூ.5000 தளவாடங்கள் வாங்க அன்பளிப்பும், உருமாண்டாம்பாளையம் டி.செல்வராஜ் 20 நூல்களும், செலக்கரிச்ச்கல் ரோட்டரி சங்கம் 620 நூல்களும், கே.ஆர்.ராஜேந்திரன் 2 நூல்களும், கண்ணப்ப நகர் அனிதா மற்றும் வேடப்பட்டி சுப்பிரமணியன் அரிய வகை ஓலைச் சுவடிகளையும், மத்தம்பாளையம் பங்கஜவல்லி பழங்கால ஆவணங்களையும், சக்திவேல் பவித்ரா 4 நாற்காலிகளும் வழங்கினர்.இரண்டாம்நிலை நூலகர் க.ரவிச்சந்திரன் நன்றியுரை வழங்கினார்.