ஐசிஐசிஐ அகாடமி சார்பில் 7000 இளைஞர்களுக்கு இலவச தொழில் பயிற்சி

 

கோவையில் செயல்பட்டு வரும் ஐசிஐசிஐ அகாடமி, நலிவடைந்த இளைஞர்களுக்கு தொழில்துறை சார்ந்த செயல்முறை பயிற்சிகள் வழங்கி வருகிறது. 56 குழுக்களாக பிரித்து, வருடத்திற்கு 1800 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

இது குறித்து ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான சந்தா கோச்சார் கூறுகையில்: நம் நாட்டின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான முயற்சிகளில், அக்கறையும் அதிகம் செலுத்தப்பட வேண்டியதாகவும், முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியதாகவும் ‘திறன் மேம்படுத்துதல்’ ஆகியவை முக்கிய அம்சமாக உள்ளது. சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக நலிவுற்றிருக்கும் ஒவ்வொருவரும் வளர்ச்சியையும், வளமையும் பெற நிலையான வாழ்வாதாரத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அத்தியாவசியமாகி இருக்கிறது.” என்றார்.

கட்டணங்கள் எதுவுமில்லாமல், இலவசமாக தொழில்சார்ந்த பயிற்சிகளை வழங்குவதோடு மட்டுமில்லாமல் தேர்ச்சி பெறுபவர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்குகிறது. அதற்கேற்ப பயிற்சி அளித்தல், திறனை மேம்படுத்துதல், திறனுக்கேற்ற வேலை அழிப்பது என முழுமையான அணுகுமுறையை ஐசிஐசிஐ அகாடமி செய்து வருகிறது. ஐசிஐசிஐயுடன் தொழில்ரீதியாக நட்புறவுடன் செயல்படும் நிறுவனங்களில், திறன் மேம்பாட்டு பயிற்சியில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு வேலைப்பாடுகள் ஏற்பாடு செய்கின்றன. இப்பயிற்சி நிலையங்களில் 11 திறன்களுக்கான மேம்பாட்டுப் பயிற்சிகளை அளித்து வருகிறது. இவற்றில் 7 தொழில்நுட்பம் சார்ந்தவையாகவும், 4 அலுவலக திறன் சார்ந்தவை ஆகும்.

ஐசிஐசிஐ அகாடமி ‘ஃபார் ஸ்கில்ஸ்’ மூலமாக கிராமப்புற முன்னேற்ற முயற்சி மற்றும் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் வழியாக 1.9 லட்சம் இளையதலைமுறையினருக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. இதில் 55% க்கும் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2018 மார்ச்சுக்குள் 2.5 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கி புதிய மைகல்லை தொடுவோம் என்றார் பெருமிதத்துடன்.

பயிற்சிக்கான விபரங்கள்:

குளிர்பதனப்படுத்துதல் (Refrigeration) மற்றும் காற்றுச் சீரமைத்தல் (Air – Conditioning repair), எலக்ட்ரிகல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் பழுது பார்த்தல், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன பழுதுபார்க்கும் தொழில் பயிற்சி, விற்பனைத் திறன் பயிற்சி என தொழில் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மூன்று மாதங்களில் வழங்கப்படும் இப்பயிற்சியில் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி [பெற்றவராகவும் 18 முதல் 30 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும், பயிற்சி பெறுபவர்களுக்கு சீருடையும், உணவும் வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கான பாடத்திட்டங்கள், கல்வி மற்றும் பயிற்சியாளர்களுக்கான பயிற்சிகள் நிறுவனங்களுடன் ‘அறிவுசார் பங்குதாரர்’ (Knowledge Partners) ஆக இணைந்துள்ளது. இதுவரை 7000 இளைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி பெறுபவர்களுக்கு 100% வேலைவாய்ப்புகள் வழங்கியிருக்கிறது. ரிலையன்ஸ், ராம்தேவ்ஸ் மோட்டார்ஸ், மைக்ரோடெக் இன்ஜினியரிங் கார்பரேசன் போன்ற 1000 க்கும் மேற்பட்ட தொழில்துறை பங்குதாரர் நிறுவனங்கள் தேர்ச்சி பெற்றவர்களை பணியில் அமர்த்தியிருக்கின்றன.

விண்ணப்பிப்தற்கான  முகவரி: ICICI Academy for skills, RIPS Campus, Madukkarai Market Road, Sundarapuram, Coimbatore – 641 060 Ph: 0422-320110.