சிவாஜி கணேசன் பொது நலச்சங்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு காமராஜ் இந்திரா சிவாஜி கணேசன் பொது நலச்சங்கத்தின் சார்பில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கோவை ராம் நகர் பகுதியில் வழங்கப்பட்டது.

கோவை ராம் நகர் பகுதியில் உள்ள அகில இந்திய சிவாஜி மன்றத்தின் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 92 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் திலகத்தின் வரலாறு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியின் வாயிலாக ஏழை எளிய மக்களுக்கு, அரசி, பருப்பு, காய்கறிகள் அடங்கிய தொகுப்புகள் வழங்கபட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் குழந்தைகளுக்கு, கல்வியறிவை ஊக்குவிக்கும் வகையில் புத்தகங்கள் வழங்கபட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக, சென்னை எம்எல் கான் கலந்து கொண்டார்.

மேலும் அகில இந்திய சிவாஜி மன்றத்தின் செயலாளர்  ராதாகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ஆறுமுகம், பாசமலர் சண்முகம், கோவை பாலாஜி, பறக்கும்படை ராஜ்குமார், சிவாஜி சக்திவேல், சிவாஜி சேகர், இருகூர் தங்கவேல், லட்சுமி கந்தசாமி, சுடர்விழி, கிருஷ்ணவேணி, வெள்ளியங்கிரி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.