மரக்கன்று நடும் விழா

​கோவை வ.உ.சி பூங்கா மற்றும் நேரு விளையாட்டு அரங்கத்தின் சுற்றுப்புறத்தில் மரக்கன்றுகள் நிழல் மைய தன்னார்வலர்களால் நடப்பட்டது. இந்நிகச்சியில், கோவை சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி ப.கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். மேலும்,  தன்னார்வலர்கள் மற்றும் மரக்கன்று வளர்ப்பதற்கு பொறுப்பேற்ற அருகில் உள்ள நிறுவன பணியாளர்களையும், கல்லூரி மாணவர்களையும், கைப்பந்து விளையாட்டு வீரர்களையும் பாராட்டினார்.  நிழல் மைய தலைவர் முருகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.