1330 திருக்குறளை ஒப்பிக்கும் திறனுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத் திட்டத்தின் கீழ் பயன்பெற கோவை மாவட்டத்தில் 1330 குறட்பாக்களை மனனம் செய்து ஒப்பிக்கும் திறனுடைய மாணவ/மாணவியர்கள் இருப்பின் தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது

உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களைய பள்ளி மாணவர்கள் இளம்வயதிலேயே அறிந்து கொண்டு கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் “திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு” திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் மாணவ மாணவியருக்குத் தலா ரூ.10,000 ரொக்கப் பரிசு தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் கோவையில் 1330 குறட்பாக்களை மனனம் செய்து ஒப்பிக்கும் திறனுடைய மாணவ மாணவியர்கள் ‘தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர், கோவை‘ எனும் முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.