பெரு வணிக நிறுவன பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கோள்ள அறிவுரை

பெரு வணிக நிறுவனங்களில் பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கொருமுறை சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெரு வணிக நிறுவனங்களின் பணியாளர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து மாநகராட்சி நிர்வாக தரப்பில் கூறப்பட்டதாவது, “கோவை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பெரும் வணிக நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா (pool test) பரிசோதனையை தனியார் கொரோனா பரிசோதனை கூடங்களில் எடுக்க வேண்டும்”

இவ்வாறு கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.