மாவட்ட பாஜக கட்சி சார்பில் ‘நான் உங்கள் நண்பன்’ சேவை துவக்கம்

கோவை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பிரிவு சார்பாக ‘நான் உங்கள் நண்பன்’ என்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு அலைபேசி சேவை துவங்கப்பட்டது. இதனை மாநில பொதுச் செயலாளர் ஜி.கே.எஸ். செல்வகுமார் மற்றும் மாவட்ட பா.ஜ.க தலைவர் நந்தகுமார் ஆகியோர் துவக்கி வைத்தார்.

பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள குடிநீர், சாக்கடை பிரச்சனைகள் மற்றும் மின் இணைப்பு துண்டிப்பு போன்ற அன்றாட பிரச்சனைகளை 99521 11100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் அவர்களது பிரச்சனைகளுக்கு  சம்பந்தப்பட்ட துறையினரை தொடர்பு கொண்டு குறைகளை தீர்க்க ஏற்பாடு செய்ய வசதியாக இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பாஜக ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பிரிவு  மாவட்ட தலைவர் புல்லட் சதீஷ், துணைத் தலைவர் ராஜேந்திர குமரன், செயலாளர் அபினவ் ரங்கசாமி, வழக்கறிஞர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.