இன்று கோவையில் 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. அந்த வகையில் இன்று 238 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

இன்று போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இரண்டு பேருக்கு தொற்று உறுதியாகியதால் கோவை போக்குவரத்து கழகத்தில் இவர்கள் இருவரும் பணியாற்றிய அறை முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், அவர்களுடன் பணியாற்றியவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இன்று ஒரே நாளில் பீளமேடு மற்றும் செல்வபுரம் பகுதிகளைச் சேர்ந்த தலா 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர உக்கடம் மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த தலா 10 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுதவிர சரவணம்பட்டி, சுந்தராபுரம் மற்றும்  துடியலூர் பகுதிகளில் தலா 8 பேருக்கும், ஆர்.எஸ்.புரம், ராமநாதபுரம் மற்றும் வடவள்ளி பகுதிகளில் தலா 7 பேருக்கும், சூலூர் சுற்றுவட்டாரத்தில் 5 பேருக்கும், பெரிய நாயக்கன் புதூர், நீலிக்கோணாம்பாளைம் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் 4 பேருக்கும் என மொத்தம் 83 பெண்கள் மற்றும் 155 ஆண்கள் என்று மொத்தம் 238 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.