கொரோனா காலத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்கள்

கொரோனா காலத்தில் 43 சதவீத இந்தியர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக GOQii என்ற தனியார் சுகாதார நிறுவனம் 10 ஆயிரம் இந்தியர்களிடம் நடத்திய ஆய்வில் 26 சதவீத நபர்களுக்கு குறைந்த அளவிலான மன அழுத்தம் இருந்ததும், 11 சதவீத நபர்களுக்கு மிதமான மனச்சோர்வு இருந்ததும் தெரியவந்துள்ளது. 6 சதவீத பேருக்கு மன அழுத்தத்திற்கான கடுமையான அறிகுறிகள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

கொரோனா தாக்கத்தால் கடந்து ஐந்து மாதங்களில் குறிப்பாக ஊரடங்கு, கவலை, வேலையிழப்பு, உடல்நிலை பாதிப்பு ஆகியவற்றால் இந்தியர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

source news