பெண்ணாக மாறிய மாலுமி

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மணீஷ் கிரி என்பவர்  கடந்த 2010ம் ஆண்டு மாலுமியாக ஐ.என்.எஸ். இக்ஸிலா கப்பற்படை தளத்தில் சேர்ந்தார். பின்னர் கடந்த வருடம் விடுமுறையில் சென்ற மணீஷ் கிரி மீண்டும் பணியில் சேர்ந்த போது அவரது நடவடிக்கையில் மாற்றத்தை கண்டறிந்தனர். பணி நேரம் போக மற்ற நேரத்தில் சேலை மற்றும் மாடல் உடைகளை அணியத் துவங்கினார். இதனை கண்டு சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது விடுமுறைக்கு சென்ற மணீஷ் கிரி, மும்பையில் மருத்துமனையில் ஒன்றில் பெண்ணாக மாறியதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து கப்பற்படை விதிமுறைகளை மீறியதாக அவரை கிழக்கு கடற்படை கமாண்டர் உத்தரவின் பேரில் உடனடியாக அவரை பணி நீக்கம் செய்யபட்டார்.

இதுகுறித்து மனிஷ் கிரி கூறுகையில்: நான் விருப்பபட்டு தான் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினேன். இதில் என்ன தவறு இருக்கிறது? அப்படி என்ன நான் குற்றம் செய்துவிட்டேன் என்றும் கேள்வி எழுப்பினார்.  7 வருடங்களாக நாட்டுக்காக பாடுபட்டிருக்கிறேன் என்றும் என்னை பணி நீக்கம் செய்ததை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.