கோவையில் செல்வபுரம் பகுதியில் இன்றுமட்டும் 27 பேர் கொரோனா தொற்று உறுதி

  • கோவையில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வரும் சூழலில், கோவையில் நேற்று (25.7.2020) ஒரே நாளில் 270 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் செல்வபுரம் பகுதியில் மட்டும் 37 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இன்று (26.7.2020) வெளியாகியுள்ள விவரங்களின் படி செல்வபுரம் பகுதியில் மேலும் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் மொத்தமாக 220 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 28 வயது மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் பணியாற்றி மருத்துவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதே போல் இ.எஸ்.ஐ மருத்துவ பணியாளர் ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், செல்வபுரத்தில் 27 பேர், டவுன்ஹாலை சேர்ந்த 25 பேர், கணபதியில் 10 பேர், பொள்ளாச்சி சுற்றுவட்டாரப்பகுதியில் 8 பேர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 பேர், சரவணம்பட்டி மற்றும் பேரூர் பகுதிகளில் 7 பேர், இவர்கள் தவிர சிங்காநல்லூர், குனியமுத்தூர், உக்கடம் பகுதிகளில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சித்தாபுதூரில் 5 பேர் உட்பட கோவையில் இன்று 122 ஆண்கள் மற்றும் 98 பெண்கள் என மொத்தம் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதே நேரத்தில் வைரஸ் தொற்றால் கோவையில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூர் முத்தப்ப செட்டியார் காலனியை சேர்ந்த 47 வயது ஆண் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தார். மேலும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைகோளம்பாளையம் பகுதியை சேர்ந்த 62 வயது மூதாட்டி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போத்தனூரை சேர்ந்த 75 வயது முதியவர், உக்கடத்தைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிங்காநல்லூரை சேர்ந்த 60 வயது முதியவர் ஆகியோர் கொரோனா தொற்றல்  உயிரிழந்தனர்… மேலும், வரதராஜபுரத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி மூச்சுத்திணறல் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் ஜூலை 23 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இவரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் மூதாட்டி உயிரிழந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பின்னர் உறுதி செய்யப்பட்டது.

கோவையில் கொரோனா பாதிப்புக்கு கோவையைச் சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் இன்று (26.7.2020) பலியாகினர்.

இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 103 பேர் குணமடைந்து இன்று (26.7.2020) வீடு திரும்பினர். தற்போது இ.எஸ்.ஐ மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் 1,419 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.